மனிதனைப் போல தற்கொலையில் ஈடுபடும் உயிரினம் எது என்று தெரியுமா?

காகங்கள் ஏனைய பறவைகளைபோல் இல்லாமல், அன்றாடம் எமக்கு மிகவும் பரீட்ச்சயமான பறவை ஆகும். அதனால் தான் என்னவோ நாம் காகத்தை அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.

காகங்கள் உண்மையாகவே தற்கொலை செய்து கொள்கின்றன. காகமும் ஒரு காதல் பறவை.
தனது துணையை எப்போதும் பிரியாது.அப்படி பிரிந்தால் தனது இன்னுயிரை விடும்.

ஆண் காகத்திற்கும் பெண் காகத்திற்கும் இடையே முதலில் நட்புறவு ஏற்படும். பின் அது காதலாக மாறும்.
இதில் என்ன ஒரு வித்தியாசம் என்றால் மனிதர்களை போல பல்வேறு காகங்களை காதலித்து ஒருவரை திருமணம் செய்யாது.நாம் இருவர் நமக்கு இருவர் என்பது போல் வலுவானது.

நட்பு பின் காதலாக மாற , ஒரு மரத்தில் ஆண் காகம் கூடு கட்டும். பின் அதில் பெண் காகமானது அமர்ந்து முட்டைகளை அடை காக்கும். 40 நாட்கள் பெண் காகமானது அந்த கூட்டிலேயே இருந்து அடைகாக்கும்.

அவ்வளவு சீக்கிரமாக கூட்டை விட்டு எங்கும் செல்லாது.
அந்த 40 நாட்களும் ஆண் காகம் தான் இரை (உணவு) , தண்ணீர், எல்லாம் தேடி வந்து கொடுக்கும். குஞ்சுகள் கூட்டை விட்டு வந்த உடன் அந்த பெண் காகமானது ஆண் காகத்தை வெறுக்க துவங்கும்.

எத்தனை முறை ஆண் காகமானது பெண் காகத்தையும், தனது குஞ்சுகளையும் பார்க்க வந்தாலும், பெண் காகமானது சந்திக்கவே விடாது. தனது குஞ்சுகள் வளரும் வரை ஆண் காகத்தை பெண் காகம் சந்திக்காமல், வெறுக்க துவங்கும். தன்னுடைய காதல் பிரிவை தாங்காத காகம் , காதலியின் பிரிவால் வாடி தவிக்கும்.
இறுதியில் காதலியின் பிரிவை தாங்காத ஆண் காகம் எந்த உணவும் உட்கொள்ளாமல் , தற்கொலை செய்து கொள்ளும்.

Post a Comment

Previous Post Next Post