ஓவிய மலை பற்றி சுவாரஸ்யமான தகவல்.


தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள குஸ்கோ நகரில் இந்த மலை அமைந்துள்ளது.இதற்கு ஆன்ட்ரியன் மலைத்தொடர் என்று பெயர்.
இதன் மொத்த உயரமான 5,200 மீ உயரமும் வண்ணம் பூசப்பட்டதைப் போல் இயற்கையாகவே அமைந்துள்ளது.
இங்கு, குளிர் காலம் வரும்போது  பனிப் பெய்யும். பனிக்காலம் முடிந்ததும் தான், இந்த ஓவியங்களைப் பார்க்க முடியும். அப்போது, பனி உருகி மலைகளின் பாறைகளை காணமுடியும்.
அப்போது ஏற்படும் இயற்கை மாற்றத்தால், மலைத்தொடர் முழுவதும் பல பல வண்ணங்கள் பூசப்பட்டது போல் காட்சியளிக்கும். இந்த மலைத்தொடரானது இவ்வாறு இருப்பதற்கு அங்கு நிலவும் காலநிலை, அந்த மண்ணில் நிலவும் தாதுப் பொருட்கள் காரணமாக கூறப்படுகிறது.
இதன் சிவப்பு நிறத்துக்கு செம்மண் படிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மஞ்சள் நிறம் இரும்பு சல்பைடின் படிவதால் ஏற்பட்டிருக்கலாம் எனப்படுகிறது.
இந்த அழகிய காட்சிகளை காணஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். 


Post a Comment

Previous Post Next Post