இப்போது Online மூலம் இலவசமாக கற்கை நெறிகளை (Courses ) வீட்டில் இருந்தவாறே கற்கலாம்.

வீட்டில் இருந்தவாறே அனைத்து விதமான துறைகளையும்  Online மூலம் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும்.

அதற்கான சிறந்த 10 வலைத்தளங்கள் பின்வருமாறு. 

1. Coursera

 Coursera எனும் இணையத்தளம் கடல் போன்றது. இங்கு அனைத்து துறைகளிலும், அனைத்து தலைப்புகளிலும், அனைத்து மொழிகளிலும் Courses உள்ளது.

உங்களுக்கான அக்கௌன்ட் ஓபன் செய்து ,உங்களுக்கு தேவையான தலைப்புகளை தேர்ந்தெடுத்து நீங்கள் இலவசமாக படித்து கொள்ளலாம்.

 உலகத்திலுள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் Michigan ,Stanford, IBM ,Google நடத்தப்படும் Online courses. ஆனால், படித்ததற்கான சான்றிதழ் பெற பணம் செலுத்த வேண்டியிருக்கும் ஒரு சில coursesக்கு மட்டுமே இலவச சான்றிதழ் கிடைக்கிறது.

 இந்த இணையதளம் செயலியாகவும் வழங்கி வருகிறது. மேலும் இந்த இணையதளம்  Udemy போல் பல்வேறு இலவச வகுப்புகளை நமக்கு வழங்குவதோடு கட்டணச் சேவையில் வைத்திருக்கும் வகுப்புகளைப் பணம் செலுத்தி வாங்க முடியாத எளிய மாணவர்களுக்கு உதவியாக (தகுந்த காரணங்கள் கொடுப்பின் ) வகுப்புகளை இலவசமாகவே வழங்குகிறது.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.coursera.org/


2. Udemy

இந்த இணையதளம் நமக்குப் பல வகையான தொடக்க நிலை (Beginner) வகுப்புகளை இலவசமாக வழங்குகிறது. இந்தத் தளம் நமக்குச் செயலியாகவும் (App) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தளம் அடிப்படை வகுப்புகள் மட்டுமின்றிப் பிற நிலை வகுப்புகளையும் கட்டணத்தோடு வழங்குகிறது. இது மக்களிடையே வழங்கி வரும் மிகவும் பிரபலமான சேவையாகும்.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.udemy.com/


3. Guvi

இந்தச் சேவை இணையத்தளம் மற்றும் செயலியாகவும் வழங்கப் படுகிறது. இது காணக்கிடைக்காத பல்வேறு வகுப்புகளை தங்கள் தாய் மொழிகளில் மாணவர்களுக்கு கற்பித்து கல்வியை வழங்குகிறது.

இலவசமா கோடிங் கூட படிக்கலாம்.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.guvi.in/


4. Free Code Camp

நிரலாக்கம், மென்பொருள் கட்டமைப்பு, கணினி அறிவியல் போன்றவற்றை, இதில் தெரிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 300கும் அதிகமான காணொளிகள் இருக்கின்றன. இவர்களின் வலயத்தளத்தில் சென்று படித்தால் சான்றிதழ் பெறலாம்.

• Java Script

• Html

• Css

• Python

• SQL

• Linux

• Machine Language

முதலிய நிரலாக்க மொழிகளை இந்தத் தளம் வாயிலாகக் கற்றுக்கொள்ளலாம் . இந்தத் தளத்தில் படித்த நிரலாக்க மொழியை இலவச கம்பைலர் (Compiler) மூலமாகச் செய்தும் பார்க்கலாம்.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.freecodecamp.org/


5. W3Schools

• SQL

• JavaScript

• CSS

• HTML

• Java

• jQuery

• Python

• PHP

முதலிய நிரலாக்க மொழிகளை இந்தத் தளம் கற்பிக்கிறது. மேலும் இந்தத் தளத்தில் ஆன்லைனில் சான்றிதழ்களைத் தேர்வு எழுதிப் பெறலாம். மேலும் இலவசத் தொகுப்பியும் (Compiler) இந்தத் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.w3schools.com/


6. World Health Organization

Online இல் பயின்று ,இலவச சான்றிதழ் கிடைக்கும் ஓர் இணையத்தளம் ,உலக சுகாதார நிறுவன இணையத்தளம்(World Health Organization)

 தளத்திர்ற்குச் செல்ல : https://openwho.org/courses


7. Skillshare

உங்களுக்கு அனிமேஷன் ,கிராபிக்ஸ்,போட்டோகிராபி போன்ற துறைகளில் ஆர்வம் இருந்தால் ,Skillshare இணையதளத்தை பயன்படுத்தலாம்.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.skillshare.com/


8. கான் அகாடெமி.

கான் அகாடமி பயிற்சிகள், அறிவுறுத்தல் வீடியோக்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் டாஷ்போர்டை வழங்குகிறது, இது வகுப்பறைக்கு வெளியேயும் கற்பதற்கு உதவி அளிக்கிறது.

கணிதம், அறிவியல், கணினி, வரலாறு, கலை வரலாறு, பொருளாதாரம் மற்றும் பலவற்றை கற்க முடியும்.

கற்பவர்களுக்கு வலுவான அடித்தளத்தை நிறுவ உதவும் திறன் தேர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே அடுத்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு வரம்பு இல்லை.

கான் அகாடமி அனைத்து வகையான பயிற்சியாளர்களுக்கும் அவர்களின் குழந்தைகள் அல்லது மாணவர்கள் என்ன செய்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு எப்படி சிறந்த முறையில் உதவ முடியும் என்பதை நன்கு புரிந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.khanacademy.org/

 

9. Open Culture Online Courses

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 1000 விரிவுரைகள், வீடியோக்கள் மற்றும் பாட்காஸ்ட்களை இந்தப் பக்கம் சிறப்பித்துக் காட்டுகிறது.

இந்த தளம் பல்கலைக்கழகங்களின் தனியார் தளங்களில் மட்டுமே காணக்கூடிய நிறைய விஷயங்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் எளிதாக உலாவக்கூடிய வகைகளில் உள்ளன. இதன் பொருள் நீங்கள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் தளத்திற்கும் சென்று தேடாமல் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக படிப்புகளைக் காணலாம்.

இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வேல்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ள பல மாநில பல்கலைக்கழகங்களின் படிப்புகள் உள்ளன. ஒரு படிப்புப் பகுதியில் பல படிப்புகளைக் கண்டறிய இது மிகவும் பயனுள்ள ஆதாரமாகும்.

தளத்திர்ற்குச் செல்ல : https://www.openculture.com/freeonlinecourses


10. Free Online Course Materials

Massachusetts Institute of Technology, உலகின் தலைசிறந்த யூனிவெர்சிட்டிகளில் ஓன்று. இதன் வகுப்புகள் அனைத்தையும் இலவசமாக பெறலாம். இது சற்றே கடினமான, ஆனால் தரமிக்கவை. பொறியியல் மாணவர்கள் நிச்சயம் இதை காண வேண்டும்.

தளத்திர்ற்குச் செல்ல : https://ocw.mit.edu/index.htm

Post a Comment

Previous Post Next Post