தங்க விலை எவ்வாறு, யாரால் நிர்ணயிக்கப்படுகிறது?


தங்க விலை என்பது எந்த தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பால் அல்லது நகை கடையால் நிர்ணயிக்கப்படுவதல்ல.

அதாவது தங்கத்தின் விலை என்பது Floating Market வழியாகவே நிர்ணயிக்கப்படுகிறது. பங்குச்சந்தை போல் இருக்கும் Commodity Trading போன்ற உலோக வர்த்தக மையங்களில் ட்ரேடிங் செய்யப்படுவதை வைத்து தான் தங்க விலையும் மாறுகிறது.

London Bullion Market Association தங்க விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விலைகள் தினமும் காலை GMT நேரம் 10:30 மணிக்கும் , GMT நேரம் பிற்பகல் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் நிர்ணயிக்கப்படுகின்றன.

விடுமுறை நாட்களில் விலை நிர்ணயம் கிடையாது.

தொழில்துறையில் நான்கு வகையான நிறுவனங்களால் தங்கம் கையாளப்படுகிறது.அவையாவன :

1. ஆய்வு செய்வோர்(Exploration company)
2. தங்க சுரங்க உரிமையாளர்கள்
3. நுகர்வோர்
4. மீள்சுழற்சி செய்வோர்

நுகர்வோரில் 3 பிரிவுகள் உள்ளன. அவை

1. பல்வேறுபட்ட தொழில்துறைகள்
2. நகை உற்பத்தியாளர்கள்
3, முதலீட்டாளர்கள்.

மேற்குறிப்பிட்ட நான்கு பங்கேற்பாளர்களிடையே ஒரு நிலையான விலையில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் அல்லது வழங்கல் மற்றும் தேவையை கட்டுப்படுத்துவதன் மூலம் விலை ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருக்க, சந்தை நிலைமைகளை பராமரிக்கவும் இது ஒரு ஒப்பந்தமாகும்.

தங்க விலைகளை தீர்மானிக்கும் காரணிகள்

இதற்கு பொதுவாக வெளிப்புற பங்குச்சந்தை, பொருளாதாரம் போன்றவையும் முக்கிய காரணிகளாகும்.

அதாவது பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது தங்கத்தின் விலை அவ்வளவு மாறாது. ஆனால் மந்தமான பங்குச்சந்தை, பொருளாதார சூழ்நிலையின் போது முதலீடுகள் தங்கத்தின் பக்கம் திருப்படுகிறது. அந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும்.

தங்க விலைகளை தீர்மானிக்க உதவும் சில அடிப்படை காரணிகள் உள்ளன. அவை பின்வருமாறு:

  • சர்வதேச சந்தைகளில் பிற பொருட்களின் ( commodities ) விலை மாற்றங்கள் மற்றும் இந்த பொருட்களின் தேவை மற்றும் கிராக்கி
  • அமெரிக்க மற்றும் உலகளாவிய நாடுகளின் பணவீக்கம், அதிகரித்த நாணய அச்சிடுதல் ஆகியவற்றால் உந்தப்படுகிறது.
  • உலக நாடுகளின் அமெரிக்காவுடனான வர்த்தக வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக (trade and growth imbalances ) ஏற்படும் இரட்டை பற்றாக்குறைகள்.
  • நாடுகளின், மத்திய வங்கிகளின் செயல்பாடுகள் ,பண அச்சிடுதல், தங்க கொள்முதல் மற்றும் தங்க விற்பனை போன்றவை.
  • பணவீக்கம் மற்றும் ஊதியங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் உண்மையான வட்டி விகிதங்கள். உற்பத்தி மற்றும் தேவை.

உலகின் மிக விலைமதிப்பற்ற உலோகங்களில் ஒன்றான தங்கத்தின் விலையை உயர்த்த உதவுவது தங்கத்திற்கான தேவை, நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்க இருப்பு அளவு, அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக தங்கத்தை வைத்திருக்க விரும்புவது மற்றும் நாணய மதிப்புக் குறைப்பு .

Post a Comment

Previous Post Next Post