பிரயோசனமே இல்லாத வலைத்தளங்கள் (Useless Websites) பற்றி அறிந்துள்ளீர்களா?

 


 
ஏன் இந்த வலைத்தளங்களை உருவாக்கினார்கள் அல்லது இந்த வலைத்தளத்தை உருவாக்குவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால் உண்மையில் யாராவது நான் சும்மாவே இருக்கிறேன் என்று சொன்னால், சும்மா கொஞ்ச நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளங்களுக்கு சென்று விட்டு வாருங்கள். உண்மையிலேயே இணையத்தில் மிகவும் வித்தியாசமான வலைத்தளங்கள் இவை.

1. குதிரையின் அடியை தேடி:  இந்த இனைதளத்திள், குதிரையின் அடியை கண்டுபிடிக்க முடியாது. முயற்ச்சித்து பாருங்களேன். 
Endlesshourse
 
2. கண்டுபிடியுங்கள்: இது ஒரு வேடிக்கையான இனையத்தளம், இந்த வளைத்தளத்திள் நுழைந்த பின்னர், உங்கள் கர்சரைச் நகர்த்தினால், நீங்கள் ஒரு சத்தத்தை கேட்பீர்கள். நீங்கள் ஒரு விளங்குக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்னும் போது சத்தம் அதிகமாக கேட்கும், அந்த அதிக சத்தம் வரும் இடத்தில் சொடுக்கினால், மறைந்திருந்த விளங்கை காண்பீர்கள்! 
Find the Invisible Cow
 
3. பொறுமை எருமையை விட பெரியது: பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார், தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். இப்படி பல பழமொழிகள் உண்டு. இந்த வளைத்தளத்தை பார்தபின்னர் சொல்லுங்கள் எதாவது வருமா வராதா
Patience is a virtue 

4. சுட்டிக்காட்டி: சுட்டிக்காட்டி (pointer) யை நீங்கள் விரும்பும் இடத்தில்    உங்கள் சுட்டியை வைத்து சொடுக்கினால் ஒருவர் உங்கள் திரையில் தோன்றி அவர் விரலினால் நீங்கள் சுட்டிகாட்டிய இடத்தை தொடுவார். 
pointerpointer.com
 
5. சுவாரஸ்யம்: இது தான் வளைத்தளங்களிளேயே வித்தியாசமான வலைத்தளம். “PLEASE” என்பதைக் சொடுக்கினால், அது உங்களுக்காக ஒரு வேடிக்கையான வலைத்தளத்தை ஏற்றும். இது மிகவும் வேடிக்கையானது மற்றும் சுவாரஸ்யமான வளைத்தளம். முயற்சித்து பார்கவும், சுவாரஸ்யதுக்கு பஜஞ்சமே இருக்காது.
 The Useless Web

Post a Comment

Previous Post Next Post