உலகில் மிகவும் அமைதியான, இராணுவம் இல்லாத 10 நாடுகள்

ஒரு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க இராணுவம் இன்றியமையாத படை. ஆனால் உலகில் இராணுவமே இல்லாத நாடுகளும் சில உள்ளன. அந்த நாடுகளுக்கு அருகில் உள்ள சில நாடுகள் தமது இராணுவத்தை வழங்கி பாதுகாப்பு அம்சங்களுக்காக உதவுகின்றன.

அந்த வகையில் இராணுவமே இல்லாத நாடுகளும் அவற்றின் பாதுகாப்புக்காக அவற்றுக்கு உதவும் ஒருசில நாடுகள், பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றி காண்போம்.

1. வாடிகன் சிட்டி (Vatican City)வாடிகன் சிட்டி இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய நாடாகும். மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்). மொத்த மக்கள் தொகை 826 ஆகும்.

பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் இதுவே உலகின் மிகச் சிறிய நாடு.

உலகின் கத்தோலிக்க கிறித்துவத்தின் தலைமை மையமாக வாடிகன் நகரம் திகழ்கிறது.

இந்நாட்டின் Gendarmerie படையே இதன் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலி நாட்டின் பாதுகாப்புப் படை இதன் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது.

இதன் பாதுகாப்புப் படை 1970 ல் நீக்கப்பட்டது.


2. துவாலு (Tuvalu)துவாலு என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும்.

இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு.

நாடு உருவானதிலிருந்து இராணுவம் ஏற்படுத்தப்படவில்லை.

கடலோர காவல்படை மே நாட்டின் பாத்துகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.


3. செயிண்ட் வின்செண்ட் & கிரினாடின்ஸ் (Saint Vincent and the Grenadines)செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன் கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது.

இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.

94 நபர்களைக் கொண்ட 2 துணை இராணுவப் படைகள் உள்ளன. Special Service Unit, Coast Guard இதனுடன் உள்நாட்டு காவல்படை இதன் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.


4. பலாவு (Palau)பலாவு  பலாவுக் குடியரசு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது பிலிப்பீன்சிலிருந்து 800 கிமீ கிழக்கேயும், டோக்கியோவிற்கு 3200 கிமீ தெற்கேயும் அமைந்துள்ளது.

இது உலகின் வயதில் குறைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு 459 சதுர கிலோ மீட்டர்கள்.

30 நபர்களுடைய உள்நாட்டு காவல் படையே நாட்டின் பாதுகாப்புக்கும் அனுமதிக்கிறது.

அமெரிக்கா இதனுடனான ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பு வழங்குகிறது.


5. கிரிபாட்டி (Kribati)


கிரிபாஸ் என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவில் உள்ளன. அனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபட்டி என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்த நாட்டின் காவல் படையே இதன் தேசிய அளவிலான பாதுகாப்புக்கும் பொறுப்பு.

இந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.


6. லீக்டன்ஸ்டைன் (Liechtenstein)


லீக்கின்ஸ்டைன் என்பது நடு ஐரோப்பாவில் உள்ள இடாய்ச்சு மொழி பேசும் ஒரு சிறிய நிலம்சூழ் நாடு ஆகும். இது லீக்கின்ஸ்டைன் இளவரசரின் தலைமையில் ஆளப்படும் ஒரு அரசியல்சட்ட முடியாட்சி நாடாகும். இந்நாடு மேற்கு, மற்றும் தெற்கே சுவிட்சர்லாந்து, கிழக்கு மற்றும் வடக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 160 சதுர கிலோமீற்றர்கள் (62 சதுர மைல்கள்) ஆகும்.

இராணுவத்துக்கான செலவு அதிகம் ஏற்படுவதால் இந்நாட்டின் இராணுவம் 1868ல் நீக்கப்பட்டது.

எனினும் போர் தொடர்பான சூழ்நிலைகளில் தற்காலிகமாக ஏற்படுத்த வழிவகை உண்டு. இருந்தாலும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பையும் ஆஸ்திரேலியா,  நியுசிலாந்து ஆகிய நாடுகளே ஏற்றுள்ளன.

இந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

இந்தியாவுடன் ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கொண்டாடும் 4 நாடுகளுள் இதுவும் ஒன்று.


7. அண்டோரா (Andorra)இந்த நாடானது தமது பாதுகாப்புக்காக ஸ்பெயின், பிரான்ஸ் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நாட்டுக்கு துணை இராணுவ பாதுகாப்புப் படை இருந்தாலும் அதுவும் அந்நாட்டின் காவல்துறையின் ஓர் அங்கமாகவே செயல்படுவதால் இதற்கான இராணுவ பாதுகாப்பை மேற்கண்ட நாடுகள் பெற்றுள்ளன.


8. மார்ஷல் தீவுகள்


மார்ஷல் தீவுகள், அதிகாரப்பூர்வமாக மார்ஷல் தீவுகள் குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு, இது சர்வதேச தேதிக் கோட்டிற்கு சற்று மேற்கே உள்ளது. புவியியல் ரீதியாக, நாடு மைக்ரோனேசியாவின் பெரிய தீவுக் குழுவின் ஒரு பகுதியாகும்.

நாடு உருவானதிலிருந்து கடலோரக் காவல்படையுடன் ஒருங்கிணைந்த உள்நாட்டுக் காவல்படையே எல்லைப் பகுதியையும் காக்க பொறுப்பேற்றுள்ளது.

இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்காவும் ஏற்றுள்ளது. 


9. சமோவா


சமோவா ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia) ஆகும். 

இங்கு வாழும்மக்கள் தொகை  198,414 (2020)

நாடு உருவானதிலிருந்து இதற்கு இராணுவம் உருவாக்கப்படவில்லை.

சிறிய காவல் படை & கடலோர காவல்படை இதற்கான பாதுகாப்பை ஏற்றுள்ளன.

நியுசிலாந்தும் இதன் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளனது.


10. சாலமன் தீவுகள்


சொலமன் தீவுகள் மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். 

இங்கு வாழும்மக்கள் தொகை  686,884 (2020)

இன ரீதியான பிரச்சினை ஏற்படும் வரை இராணுவம் இருந்தது. பிரச்சினையை ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளின் தலையீட்டால் உள்நாட்டு பிரிச்சினை முடிவுக்கு வந்தது.

உள்நாட்டு காவல் துறை அமைப்புகளே நாட்டின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளன.

 

Post a Comment

Previous Post Next Post