உலகில் உள்ள அருவருக்கத்தக்க சில விசித்திரமான 10 உணவுகள்

1. பறவைக் கூடு சூப் (BIRD NEST SOUP ) – சீனா


"கிழக்கின் கேவியர்" என்று அழைக்கப்படும். உண்ணக்கூடிய பறவை கூடுகளிலிருந்து சூப் தயாரிக்கப்படுகிறது. பறவையின் கூடு சூப் மிகவும் அரிதானது மற்றும் மதிப்புமிக்கது.

இதை சாப்பிடுவது தங்கள் இளமையை பராமரிக்க உதவுவதோடு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையையும் வலுவான உடலையும் கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். பாரம்பரிய சீன மருத்துவத்தின் படி, இது குறிப்பாக சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது என நம்பப்படுகிறது..

மிகவும் மதிப்புமிக்கது "சிவப்பு நிற கூடுகள்" ஆகும், இது ஒரு கிலோவிற்கு $ 10,000 வரை பெறுமதியானதாகும் . வெள்ளை மற்றும் கருப்பு-கூடு ஒரு கிலோவிற்கு $ 5,000 முதல் $ 6,000 வரை பெறுமதி மிக்கவை .

தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் swiftlet bird பறவையின் கூடு முக்கிய மூலப்பொருள் ஆகும்.

 

2."ஃபுகு" (Fugu)


ஃபுகு (Fugu) என்பது பஃபர்ஃபிஷ் (Pufferfish) மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுக்கான ஜப்பானிய வார்த்தையாகும்.

ஃபுகு (Fugu) உணவு தயாரிப்பது ஜப்பான் மற்றும் பல நாடுகளில் சட்டத்தால் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் கடுமையான பயிற்சியின் மூலம் தகுதி பெற்ற சமையல்காரர்கள் மட்டுமே மீன்களை சமைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜப்பானிய சுவையான ஃபுகு மிகவும் நச்சுத்தன்மையுடையது, அதன் தயாரிப்பில் சிறிய தவறு கூட மிகவும் ஆபத்தானது. ஆனால் டோக்கியோ நகர அரசு கட்டுப்பாடுகளை தளர்த்ததி, அதிக பயிற்சி பெற்ற மற்றும் உரிமம் பெற்ற சமையல்காரர்களுக்கு மட்டுமே உணவை பரிமாற அனுமதிக்கிறது.

இது சயனைடை விட 200 மடங்கு அதிக கொடியது என்று கூறப்படுகிறது

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2000 ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் ஃபுகு உண்ட 23 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீன் பிடிப்பவர்கள், அவர்கள் வீட்டில் சமைத்து உண்ண முயச்ர்த்தித்த போதே மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

3. சிலந்தி ப்ரை - கம்போடியா


கம்போடியாவில் வறுத்த சிலந்தி ஒரு பிராந்திய சிற்றுண்டாகும். கம்போடிய நகரமான ஸ்குவானில் (செங் ப்ரே, கம்போங் சாம் மாகாணம்), வறுத்த சிலந்திகளை ஒரு சிறப்பு சிற்றுண்டியாக விற்பனை செய்வது, இந்த நகரத்தின் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான ஈர்ப்பாகும்.

சிலந்திகள் ஸ்குவானுக்கு வடக்கே உள்ள கிராமங்களில் உள்ள துளைகளில் வளர்க்கப்படுகின்றன, அல்லது அருகிலுள்ள வனப்பகுதியில்வளர்க்கப்பட்டு எண்ணெயில் பொரிக்கப்படுகின்றன.

இந்த நடைமுறை கெமர் ரூஜ் ஆட்சியில், உணவு பற்றாக்குறையாக இருந்தபோது, ​​மக்கள் விரக்தியால் சிலந்திகளை சாப்பிட ஆரம்பிக்கப்பட்ட்தாக கூறப்படுகிறது.

 

4. ப்ரேரீ ஆய்ஸ்டர்கள் (Prairie Oysters) - கனடா


இந்த உணவு காளை விந்தணுக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வறுத்து மூலிகைகள், மசாலா, சாஸ் மற்றும் டிப்ஸ் ஆகியவற்றுடன் cowboy உணவு வகைகளின் உண்மையான சுவைக்காக தயாரிக்கப்படுகின்றன.


 5. பால்ட் (Balut) - பிலிப்பைன்ஸ்


ஒரு பாலுட் என்பது ஒரு கருவுற்ற பறவை (வாத்து) முட்டையில் தயாரிக்கப்படும் ஓர் உணவு ஆகும். இது உள்ளூர் கலாச்சாரத்தைப் பொறுத்து 14 முதல் 21 நாட்கள் வரை அடைகாக்கப்பட்டு பின்னர் வேகவைக்கப்படுகிறது.

நீண்ட காலத்திற்கு அடைகாத்திருக்கும் பலட் நன்கு வளர்ந்த கரு, எலும்புகள் மெல்லும் மற்றும் முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு மென்மையானது.

மல்லார்ட் வாத்து முட்டை பாலட் செய்ய மிக முக்கியமான இனமாக கருதப்படுகிறது.


6. ஹாக்கிஸ் (Haggis) - ஸ்காட்லாந்து


ஹாகிஸ் என்பது ஒரு சுவையான புட்டு ஆகும், இதில் செம்மறியின் இதயம், ஈரல், வெங்காயம், ஓட்ஸ், சூட், மசாலா மற்றும் உப்பு சேர்த்து அரைக்கப்பட்டு விலங்குகளின் வயிற்றில் அடைத்து சமைக்கப்படுகிறது. இப்போது அதற்கு பதிலாக ஒரு செயற்கை உறையில் அடைத்து சமைக்கப்படுகிறது.7. சனக்ஜி (Sannakji) - தென் கொரியா


சான்-நக்ஜி என்பது நீண்ட கை ஆக்டோபஸ். ஆக்டோபஸ்கள் பொதுவாக சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறப்படுவதற்கு முன்பு கொல்லப்படுகின்றன,

இதனால் உணவு பரிமாறும் பொது ஆக்டொபஸ் துண்டுகளின் அசைவுகளை அவதானிக்கலாம்.


8. எஸ்காமோல்ஸ் (Escamoles) - மெக்ஸிகோ


மெக்ஸிகோவில், எஸ்கமோல்ஸ் (Eskmols) நீளமாக வெள்ளை நிறத்தில் உள்ள பீன்ஸ் போன்று உள்ள ஒரு வகையான பூச்சியின் முட்டையாகும். இது அந்த நாட்டு மக்களால் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடப்படுகிறது.


 9. நாகப்பாம்பு இதயம் (COBRA HEART) - வியட்நாம்

லே மாட் (Le Matt) பாம்பு கிராமத்தில் வாழும் வியட்நாமிய உள்ளூர்வாசிகள் தலைமுறைகளாக பாம்புகளை வேட்டையாடி பிடித்து வருகின்றனர். இதில் நாக பாம்பின் இதயம் பிரதான பொருளாக காணப்படுகிறது


இந்த நகரம் இப்போது வியட்நாமிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான பாம்பு உணவகங்களால் நிரம்பியுள்ளது.


10. பூச்சி பிஸ்கட் (INSECT BISCUITS) - ரோம்


நாம் எல்லாருமே பிஸ்கட் சாப்பிட்டிருப்போம் ஆனால் இந்த மாதிரி பிஸ்கட்ட யாருமே இதுவரை சாப்பிட்டு இருக்க முடியாது .

இதன் பேருக்கு ஏற்றார் போல் இந்த பிஸ்கட் முழுவதும் வெறும் பூச்சிகளால் ஆனது . நாம் சாப்பிடும் பிஸ்கட்டில் சாக்லேட், பாதாம், முந்திரி இன்னும் பல விலை உயர்ந்த பருப்பு வகைகள் இருக்கும். ஆனால் இந்த பிஸ்கெட் பூச்சி, கொசு போன்றவைகளால் ஆனது.

இதை அவர்கள் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு பதிலாக உண்பார்கள். இது அவர்களின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமானதாக இருக்கின்றது.
Post a Comment

Previous Post Next Post