2021 ஆம் ஆண்டின் சிறந்த 10 திரைப்படங்கள்

IMDb இணையதளத்தின் தரவரிசைக்கு அமைவாக 2021 ஆம் ஆண்டின் சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள்  


1. Kaadan (2021)
IMDb Rating 8.9 


காடன் (Kaadan) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்  திரைப்படம் ஆகும்.

இப்படத்தை பிரபு சாலமன் எழுதி இயக்கியுள்ளார். ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் ரானா தக்குபாடி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா பில்கோங்கர், சோயா உசேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கில் ஆரண்யா எனவும், இந்தியில் ஹாதி மேரே சாதி என்ற பெயரிலும் தயாரிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் சில நடிகர்கள் மாறுபட்டுள்ளனர்.

இந்த படம் 2020 ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கோவியட்-19 பெருந்தொற்றால் தாமதமாகி 26 மார்ச் 2021 அன்று வெளியிடபட்டது.

 

2. Sarpatta Parambarai (2021)
IMDb Rating  8.8 

சர்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) அல்லது இன்னும் எளிமையாக சார்பட்டா, என்பது 2021 ஆண்டு வெளியான இந்திய தமிழ் வரலாற்று, விளையாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும்.

இதை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தை சண்முகம் தட்சனராஜின் K9 ஸ்டுடியோவுடன் இணைந்து இவரது Blue Production  பதாகையின் கீழ் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா, ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி ஜி மற்றும் எடிட்டர் செல்வா ஆர். கே ஆகியோர் அடங்குவர்

சார்பட்டா பரம்பரை முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றின் விளைவாக, தயாரிப்பாளர்கள் இதை OTT வெளியீடாக கொண்டுர முடிவெடுத்தனர். வெளியீட்டு உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோவால் பெறப்பட்டன. திரைப்படம் 2021 July 22 அன்று Prime Video இல்  வெளியிடப்பட்டது.

 

3. Mandela (2021)
IMDb Rating 8.5

மண்டேலா என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அரசியல் நையாண்டி திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் எழுதி, இயக்கியுள்ளார். படத்தை எஸ். என். சசிகாந்த், Why Not Studio ராமச்சந்திரா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, அதே நேரத்தில் இப்படத்தை Open Window புரொடக்சன்சின் பாலாஜி மோகன்இணைந்து தயாரித்தார்.

மறைந்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பெயரானது இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு முதனைமை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது வழிகாட்டி பாத்திரத்தில் ஷீலா ராஜ்குமார் நடிக்க, கண்ணா ரவி, சங்கிலி முருகன், ஜி. எம். சுந்தர் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான இசையை பரத் சங்கர் அமைக்க, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றை விது அய்யன்னா மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

இப் படம் நேரடியாக 2021 ஏப்ரல் 4 அன்று விஜய் தொலைக்காட்சி வழியாகவும், மறுநாள் சர்வதேச அளவில் NetFlix  மூலமாகவும் வெளியிடப்பட்டது.

 

4. Karnan (2021)
IMDb Rating  8.2

கர்ணன் 2021 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

5. Master (2021)
IMDb Rating  7.9

மாஸ்டர் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். லோகேஷ் கனகராஜ் என்பவர் எழுதி மற்றும் இயக்க சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ். இந்த படம் 2021 ஜனவரி 13 அன்று வெளியானது.

 

6. Maara (2021)
IMDb Rating 7.7 

மாறா என்பது ன்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் திலீப் குமார் என்பவர் இயக்க 'பிரதீக் சக்கரவர்த்தி' மற்றும் 'சுருதி நல்லப்பா' ஆகியோர் தயாரிக்க மாதவன் மற்றும் சிரத்தா சிறீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இது மார்ட்டின் பிரகாட் எழுதிய மலையாள திரைப்படமான 'சார்லி' (2015) என்ற திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துகுமார் மற்றும் புவன் சீனிவாசன் ஆகியோரால் செய்யப்பட்டது. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் 17 டிசம்பர் 2020 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. பின்னர் 8 ஜனவரி 2021 அன்று அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வெளியானது

 

7. Pon Manickavel (2020)
IMDb Rating  7.1

பிரபுதேவாவின் 50 வது படமான பொன் மாணிக்கவேல் என்ற படத்தை ஏசி முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். இந்த படத்தில், பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

 

8. Chakra (2021)
IMDb Rating  6.9

சக்ரா (Chakra) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும்.

அறிமுக இயககுநர் எம். எஸ். ஆனந்தன் எழுதி இயக்கிய இந்த படத்தில் விஷால், சிரத்தா சிறீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெஜினா கசாண்ட்ரா எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது கணினி குற்றங்கள் மற்றும் இணைய வணிக மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் 2021 பெப்ரவரி 19 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது.

 

9. Teddy (II) (2021)
IMDb Rating 6.6

டெடி (Teddy) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மருத்துவ அதிரடி பரப்பரப்பூட்டும் திரைப்படம் ஆகும். சக்தி சௌந்தர்ராஜன் எழுதி இயக்கிய இந்த படத்தில் ஒரு டெட்டி பியர் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளது. மேலும் ஆர்யா சாயிஷாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சதீஸ், சாக்‌ஷி அகர்வால், மகிழ் திருமேனி ஆகியோர் இப்படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டுடியோ கிரீன் என்ற பதாகையின் கீழ் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

அசைவூட்ட கதாபாத்திரத்தை வடிவமைக்க இந்திய அசைவூட்ட நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் தமிழ் படம் இதுவாகும். மேலும் கோச்சடையானுக்குப் பிறகு மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ் படம் இதுவாகும். இது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 12 மார்ச் 2021 இல் வெளியிடப்பட்டது.

 

10. Sultan (2021)
IMDb Rating 6.4 

சுல்தான் என்பது 2021 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் வெளியான ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க எஸ் ஆர் பிரகாஷ் பாபு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பெயரின் கீழ் தயாரித்து இருந்தார்.

இத்திரைப்படத்தில் கார்த்திக், ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா பிண்ணனி இசை அமைத்திருந்தார். இதர பாடல்களை விவேக்-மெர்வின் கூட்டணி உருவாக்கியிருந்தனர். சத்யன் சூரியன் மற்றும் ரூபன் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பை கையாண்டனர் இத்திரைப்படம் ஏப்ரல் 22 2021 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.


Post a Comment

Previous Post Next Post