உலகின் மிக ஆபத்தான முதல் 10 ஹாக்கர்ஸ் (Hackers)

1. Kevin Mitnick


அமெரிக்க ஹேக்கிங்கில் இவர் ஒரு முக்கிய நபர் ஆவார்.
1981 ஆம் ஆண்டில், பசிபிக் பெல்லிலிருந்து (Pacific Bell) கணினி கையேடுகளைத் திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1982 ஆம் ஆண்டில், அவர் வட அமெரிக்க பாதுகாப்பு கட்டளையை (NORAD) ஹேக் செய்தார், இது 1983 திரைப்படமான War Games உருவாக்கத்திற்கு வித்திட்டது.

1989 ஆம் ஆண்டில், அவர் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷனின் (DEC) நெட்வொர்க்கை ஹேக் செய்தார் மற்றும் அவற்றின் மென்பொருளின் நகல்களை உருவாக்கினார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நிபந்தனையின் கீழ் சிறையிலிருந்து வந்து ,மீண்டும் ​​அவர் பசிபிக் பெல்லின் (Pacific Bell) குரல் அஞ்சல் (Voice Mail) அமைப்புகளை ஹேக் செய்தார்.

அவர் பெற்ற  தரவுகளை  ஒருபோதும் சுய தேவைக்கு பயன்படுத்தவில்லை பசிபிக் பெல்லின் நெட்வொர்க்கை அவர் ஒருமுறை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் . இச் சம்பவத்திற்காக அவரை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது, ஆனால் மிட்னிக் இரண்டு வருடங்களுக்கும் மேலாக மறைந்திருந்தார். பின்னர் கைது  செய்யப்பட்டு கணினி மோசடிக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டில், அவர் "Mitnick's Absolute Zero Day Exploit Exchange," ஐ தொடங்கினார், இதில் அதிக விலைக்கு முக்கியமான மென்பொருள்களின் தரவுகள் விற்பனை செய்யப்பட்டன.

 

2. AnonymousAnonymous 2003 இல் தொடங்கப்பட்டது. சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு குழுவாக இது காணப்பட்டது.

2008 ஆம் ஆண்டில் இந்த குழு சர்ச் ஆஃப் சைண்டாலஜியின்  (Church of Scientology)  வலைத்தளங்களை முடக்கத் தொடங்கியது.

மார்ச் 2008 இல்,  ஃபாக்ஸ் முகமூடியை அணிந்து உலகெங்கிலும் உள்ள சைண்டாலஜி மையங்களை தாக்கியது.

FBI மற்றும் பிற சட்ட  முகவர்களால் இக்  குழுவின் அதிக  உறுப்பினர்களைக் கண்டறிந்தாலும், ஒட்டுமொத்தமாக இவர்களை  அடையாளம் காண்பது அல்லது அகற்றுவது  சாத்தியமற்றதாக காணப்படுகிறது .

 

3. Adrian Lamo2001 ஆம் ஆண்டில், 20 வயதான அட்ரியன் லாமோ, yahoo வலைத்தளத்தில் இடம்பெற்ற ராய்ட்டர்ஸ் கட்டுரையை மாற்றியமைத்தார்.

லாமோ அடிக்கடி அமைப்புகளை ஹேக் செய்தபின்னர் பத்திரிகை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனை அறிவித்தார். சில சந்தர்ப்பங்களில், அவர் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவினார்.

லாமோ 2002 ஆம் ஆண்டில் "தி நியூயார்க் டைம்" இன் இன்ட்ராநெட்டை ஹேக் செய்து தன்னை பிரபலப்படுத்திக்கொண்டார்.

நிலையான முகவரி இன்மை, ஓர் சிறுவனுடன் வீதிலளில் அடிக்கடி தென்படுவதால்  லாமோ "தி ஹோம்லெஸ் ஹேக்கர்" என்று அழைக்கப்பட்டார்.

 

4. Albert Gonzalezதனது பாடசாலை காலங்களிலே ஹாக்கிங்கை ஆரம்பித்தார். கடைசியாக குற்றவியல் வர்த்தக தளமான Shadowcrew.com இல்  சேர்ந்து,  அதன் சிறந்த ஹேக்கர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

22 வயதில், மில்லியன் கணக்கான கடன் அட்டை கணக்குகளிலிருந்து தரவைத் திருடியாமைக்காக  நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். சிறையை தவிர்ப்பதற்காக,  அரசாங்கத்திற்கு  நிழல் குழு உறுப்பினர்களின் தகவல்களை வழங்கினார்.

எனினும் இக்  காலத்தில், கோன்சலஸ் குற்றச் செயல்களை  தொடர்ந்தார். தனது நண்பர்களுடன் சேர்ந்து  180 மில்லியனுக்கும் அதிகமான கட்டண அட்டை கணக்குகளைத் திருடினார்.

ஒரு அடிப்படை SQL Injection   பயன்படுத்தி, இந்த பிரபலமான ஹேக்கரும் அவரது குழுவும் பல நிறுவன நெட்வொர்க்குகளில் திருடினர் , TJX எனும் கார்ப்பிரேட் நிறுவனதித்திடம்  மட்டும் $ 256 மில்லியன் திருடப்பட்டது.

2015 இல் இவருக்கு தீர்ப்பளிக்கப்படட்து.

 

5. Matthew Bevan and Richard Pryceமேத்யூ பெவன் மற்றும் ரிச்சர்ட் ப்ரைஸ் ஆகியோர் பிரிட்டிஷ் ஹேக்கர் குழு ஆகும்,

அவர்கள் 1996 இல் கிரிஃபிஸ் விமானப்படை தளம், பாதுகாப்பு தகவல் அமைப்பு நிறுவனம் மற்றும் கொரிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (KARI) உட்பட பல இராணுவ நெட்வொர்க்குகளை ஹேக் செய்தனர்.

இதனால் இவர்கள்  மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவதற்கு வித்திட்டதாக  குற்றம் சாட்டப்பட்டனர். ஒரு UFO  கோட்பாட்டை நிரூபிக்கவே இது நிகழ்த்தப்பட்டதாக  பெவன் தெருவித்திருந்தார்.

அவரது வழக்கு கேரி மெக்கின் வழக்குடன் ஒத்திருந்தது . தீங்கிழைக்கும் நோக்கம் இன்றி, பெவன் மற்றும் ப்ரைஸ் இராணுவ நெட்வொர்க்குகள் கூட பாதிக்கப்படக் கூடியவை என்பதை நிரூபித்திருந்தனர்.

 

6. Jeanson James Anchetaஜீன்சன் ஜேம்ஸ் அஞ்செட்டாவுக்கு கிரெடிட் கார்டு திருட்டு, சமூக நீதியை வழங்குவதற்காக நெட்வொர்க்குகளை செயலிழக்கச் செய்வதில் ஆர்வம் இல்லை.

அதற்கு பதிலாக, அஞ்செட்டா Bot களைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்தார். மென்பொருள் அடிப்படையிலான ரோபோக்கள் அமைத்து கணினி அமைப்புகளைக் கட்டுப்படுத்தின்னார். பெரிய அளவிலான "botnets" பயன்படுத்தி, அவர் 2005 இல் 400,000 க்கும் மேற்பட்ட கணினிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். அவர் இந்த கணனிகளை விளம்பர நிறுவனங்களுக்காக பயன்படுத்தினார்.

அஞ்சேதாவுக்கு 57 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. போட்நெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஹேக்கர் சிறைக்கு அனுப்பப்படுவது அதுவே முதல் முறை.

 

7. Michael Calceபிப்ரவரி 2000 இல், "Mafia Boy" என்று அழைக்கப்பட்ட 15 வயதான மைக்கேல் கால்ஸ், பல்கலைக்கழக கணினிகளின் நெட்வொர்க்குகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பதைக் கண்டுபிடித்தார்.

அந்த நேரத்தில் முதல்தர தேடுபொறியாக இருந்த Yahoo  மற்றும் Dell, ebay, CNN,  Amazon ஆகியவற்றை DDoS தாக்குதலைப் பயன்படுத்தி சேவையகங்களின் வலைத்தளங்களை செயலிழக்கச் செய்தார்.

உலகின் மிகப்பெரிய வலைத்தளங்கள் ( $ 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையவை ) அவ்வளவு எளிதாக ஹாக் பண்ண  முடிந்ததன் காரணமாக இணைய குற்றச் சட்டத்தின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திநால் முன்னுரிமையளிக்கப்பட்டது .

 
8. Kevin Poulsen1983 ஆம் ஆண்டில், 17 வயதான பவுல்சன், டார்க் டான்டே என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தி, பென்டகனின் கணினி நெட்வொர்க்கான ARPANET ஐ ஹக் செய்தார். அவர் விரைவாக பிடிபட்ட போதிலும், அந்த நேரத்தில் மைனராக இருந்த பவுல்சன் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்து, எச்சரிகை விடுக்கப்பட்டது.

பவுல்சன் இந்த எச்சரிக்கைக்கு செவிசாய்க்காமல்  தொடர்ந்து ஹேக்கிங்இல் ஈடுபட்டார் .

1988 ஆம் ஆண்டில், பவுல்சன் ஒரு federal computer ஐ ஹேக் செய்து பிலிப்பைன்ஸின் பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் தொடர்பான கோப்புகளைத் திருடினார்.

அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​பவுல்சன் தப்பிச்சென்று, அரசாங்க கோப்புகளை ஹேக் செய்து ரகசியங்களை வெளிப்படுத்தினார்.

அவரது சொந்த வலைத்தளத்தின்படி, 1990 இல், அவர் ஒரு வானொலி நிகழ்ச்சி  போட்டியை ஹேக் செய்து, அவர் 102 வது அழைப்பாளர் என்பதை உறுதிப்படுத்தி, ஒரு புதிய Porsche கார் மற்றும் $ 20,000 வென்றார்.

பின்னர்  கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களுக்கு கணினியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

பின்னர் White Hat ஹேக்கிங் மற்றும் பத்திரிகைத் துறைக்கு மாறினார், இணைய பாதுகாப்பு மற்றும் வலை தொடர்பான சமூக-அரசியல் காரணங்களைப் பற்றி எழுதினார்.

பால்சன் மற்ற முன்னணி ஹேக்கர்களுடன் இணைந்து சமூக நீதி மற்றும் தகவல் சுதந்திரத்திற்காக  பல்வேறு திட்டங்களில் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் DeadDrop எனப்படும் திறந்த மூல மென்பொருள் SecureDrop ஐ உருவாக்கினார்  இறுதியில், பவுல்சன் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆதாரங்களுக்கிடையேயான பாதுகாபிற்காக செயற்பட் டார்.

 

9. Jonathan JamescOmrade என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தி, ஜொனாதன் ஜேம்ஸ் பல நிறுவனங்களை ஹேக் செய்தார்.

இதில்  அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கணினிகளுக்குள் நுழைந்தது அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.  அந்த சமயத்தில் ஜேம்ஸுக்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ஹேக்கிங் அரசு ஊழியர்களின்  பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் பிற முக்கிய தரவுகளிலிருந்து 3,000 க்கும் மேற்பட்ட தரவுகளை பெற்றார்.

ஜேம்ஸ் 2000 இல் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் மற்றும் பொழுதுபோக்கு கணினி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டார். இருப்பினும், நன்னடத்தை மீறல் அவரை ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கச் செய்தது.

ஜொனாதன் ஜேம்ஸ் சைபர் கிரைம் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார் .

2007 ஆம் ஆண்டில், TJX, டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஹேக் செய்யப்பட்டு பல வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது. ஆதாரம் இல்லாத போதிலும், ஜேம்ஸ் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டெய்லி மெயிலின் படி, அவரது தற்கொலைக் குறிப்பில், “எனக்கு நீதி அமைப்பு மீது நம்பிக்கை இல்லை. ஒருவேளை இன்றைய எனது செயல்களும், இந்தக் கடிதமும், மக்களுக்கு வலுவான செய்தியை அனுப்பும். எப்படியிருந்தாலும், இந்த சூழ்நிலையில் நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன், கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான ஒரே வழி இதுதான். என குறிப்பிட்டிருந்தார்.

 

10. ASTRAஇந்த ஹேக்கர் இந்த பட்டியலில் உள்ள மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர் ஏனெனில் இதுவரையில் பொதுவில் அடையாளம் காட் டப்படாத நபர்.

இருப்பினும், டெய்லி மெயிலின் படி, ஆஸ்ட்ரா பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட்டன.

2008 ஆம் ஆண்டில் அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், அந்த நேரத்தில் அவர் 58 வயதான கிரேக்க கணிதவியலாளராக அடையாளம் காணப்பட்டார்.

கிட்டத்தட்ட அரை தசாப்த காலமாக அவர் டசால்ட் குழுவை (Dassault Group) ஹேக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அவர் அதிநவீன ஆயுத தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் தரவை திருடினார், பின்னர் அவர் உலகம் முழுவதும் 250 தனிநபர்களுக்கு விற்றார். அவரது ஹேக்கிங்கினால்  டசால்ட் குழுமத்திற்கு 360 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. அவரது முழுமையான அடையாளம் ஏன் வெளிப்படுத்தப்படவில்லை என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் 'ஆஸ்ட்ரா' என்ற வார்த்தை 'ஆயுதம்' என்ற சமஸ்கிருத வார்த்தையாகும்.


Post a Comment

Previous Post Next Post