இதுவரை கோரோணா மரணங்கள் பதுவு செய்யப்படாத 10 நாடுகள்


10. போக்லாந்து (Falkland Islands)போக்லாந்து தீவுகள் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். ஆர்ஜென்டீனாவின் கரையிலிருந்து 300 மைல் (483 கிமீ) தொலைவிலும் தெற்கு யோர்சியாவின் சாங் பாறைகளிலிருந்து 671 மைல் (1,080 கிமீ) மேற்காகவும் பிரித்தானிய அண்டார்டிக் மண்டலத்திலிருந்து 584 மைல் (940 கிமீ) வடக்காகவும் அமைந்துள்ளது. போக்லாந்து தீவுகள் கிழக்கு போக்லாந்து தீவு, மற்றும் மேற்கு போக்லாந்து தீவு என்ற முக்கிய இரண்டு தீவுகளையும் 776 சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது.

இங்கு வாழும் மக்கள் தொகை 3,480 (2020)

இங்கு மொத்த கோரோணா நோயாளிகளின் எண்ணிக்கை 67 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


9. மக்காவு (Macao)
மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு என்பது மக்கள் சீனக் குடியரசின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றையது ஹாங்காங் ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே குவாங்டொங் மாகாணம், கிழக்கு, மற்றும் தெற்கில் தென்சீனக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

இங்கு வாழும்மக்கள் தொகை 649,335(2020)

இங்கு மொத்த கோரோணா நோயாளிகளின் எண்ணிக்கை 63 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


8.செயிண்ட் ப்யேர் மீகேலோன் (Saint Pierre Miquelon)செயிண்ட் ப்யேர் மீகேலோன் கனடாவிற்கருகே வடமேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் ஒரு சுய ஆட்சி பிராந்தியமாகும். போர்சிகீசிய மாலுமியொருவரால் 1520 அக்டோபர் 21ல் கண்டுபிடிக்கப்பட்டது .

இங்கு வாழும்மக்கள் தொகை 5,761(2021)

இங்கு மொத்த கோரோணா நோயாளிகளின் எண்ணிக்கை 31ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


7. வத்திக்கான் நகர் (Vatican City)வத்திக்கான் நகர் இத்தாலி நாட்டின் உரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது.

இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், 2020 கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 801 ஆகவும் இருக்கிறது.ஆதலால், இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.

இங்கு மொத்த கோரோணா நோயாளிகளின் எண்ணிக்கை 27 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


6. சொலமன் தீவுகள் (Solomon Islands)சொலமன் தீவுகள் மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும்.

இங்கு வாழும்மக்கள் தொகை 686,884 (2020)

இங்கு மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


5. மார்சல் தீவுகள் (Marshall Islands)மார்சல் தீவுகள் அல்லது அதிகாரபட்சமாக மார்சல் தீவுகள் குடியரசு மைக்ரோனீசியாவைச் சேர்ந்த மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகள் நௌருவுக்கும் கிரிபாட்டிக்கும் வடக்கிலும் மைக்ரோனீசிய கூட்டாட்சி நாடுகளுக்கு கிழக்கிலும் ஐக்கிய அமெரிக்க மண்டலமான வேக் தீவிலிருந்து தெற்கேயும் அமைந்துள்ளது.

இங்கு வாழும்மக்கள் தொகை 59,658 (2021)

இங்கு மொத்த கோரோணா நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


4. சமோவா (Samoa)


சமோவா ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia) ஆகும்.

இங்கு வாழும்மக்கள் தொகை 198,414 (2020)

இங்கு மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


3. பலாவு (Palau)


பலாவு, பலாவுக் குடியரசு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது பிலிப்பீன்சிலிருந்து 800 கிமீ கிழக்கேயும், டோக்கியோவிற்கு 3200 கிமீ தெற்கேயும் அமைந்துள்ளது. இது உலகின் வயதில் குறைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

இங்கு வாழும்மக்கள் தொகை 18,094(2020)

இங்கு மொத்த கோரோணா நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.

2. செயிண்ட் எலனா (Saint Helena)
செயிண்ட் எலனா தென் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவுத் தொகுதி. இது பிரித்தானியக் கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன், டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும்.

இங்கு வாழும்மக்கள் தொகை 6,098 (2021)

இங்கு கோரோணா நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆகும். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.

1. மைக்ரோனீசியா (Micronesia)மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் என்பது பசிபிக் பெருங்கடலில் பப்புவா நியூகினிக்குத் வடகிழக்கே அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இங்கு மொத்தம் 607 தீவுகள் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் சுயாதீன அநுசரணையுடனான தன்னாட்சி அதிகாரமுடைய ஒரு நாடாகும்.

இங்கு வாழும்மக்கள் தொகை 548,914 (2020)

இன்றுவரை ஒரு கோரோணா நோயாளி மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது வரை இங்கு ஒரு கோரோணா மரணம் கூட பதிவுசெய்யப்படவில்லை.


Post a Comment

Previous Post Next Post