மொபைல் இல் ஹாட்ஸ்பாட் (hotspot) அடிக்கடி உபயோகிப்பதால் பேட்டரி (Battery) பாதிப்படையுமா?


ஹாட் ஸ்பாட் வழியாக  தொடர்ந்து இன்டர்நெட்  உடயோகப்பதனால் விரைவாக  பேட்டரீ Weak ஆகுமா? 
 
உங்கள் மின்கலன் சேமிப்புக்கு எல்லா விதமான அறிவிப்புகளையும் (Notification) ஆஃப் செய்வது நல்லது. இந்த அறிவிப்புகள் அதிர்வு (Vibration) அல்லது ஒலி (Sound) மூலம் நம்மை வந்தடைகிறது. முகநூல், மெசஞ்சர், புலனம், தொலைவரி, கீச்சரம், இன்ஸ்டா. இப்படி ஒவ்வொன்றுக்கும் இரண்டு விதமான அறிவிப்புகள் நம்மை ஓயாமல் நெருடிக் கொண்டிருக்கின்றன. இவை மின்கல ஆற்றலைக் குறைப்பது மட்டுமல்லாமல் நமது பிற கவனத்தையும் சிதறச் செய்கின்றன.

ஸ்மார்ட்போன்கள் ஹாட்ஸ்பாட்டாக சேவை செய்யும் போது வழக்கமான போன் பயன்பாட்டை விட இது தொலைபேசியின் பேட்டரியை மிக வேகமாக பயன்படுத்துகிறது. சில ஸ்மார்ட்போன்கள் ஹாட்ஸ்பாட்டாக சேவை செய்யும் போது அழைப்புகளைப் பெற அனுமதிக்காது, ஏனென்றால் எல்லா தொலைபேசிகளும் ஒரே நேரத்தில் குரல் மற்றும் தரவை ஆதரிக்காது.

நமது திறன் பேசியின் மின்கலத்தின் (பேட்டரி) தரத்திற்கு ஏற்றாற்போல் 1000 சுழற்சி அல்லது உற்பத்தியாளர்கள் அறிவிக்கும் சுழற்சி வரை மின்கலத்தின் செயல்பாடு மிக நன்றாக இருக்கும். சுழற்சி அளவை தாண்டும் போது அதன் செயல்திறன் குறைவடைய தொடங்கும்..

1 சுழற்சி என்பது முழு சார்ஜில் இருந்து 0 வருவது ஆகும்.

இணைய பகிர்வின் (Hotspot) காரணமாக மின்கலம் விரைவில் தீரும். எனவே அதன் சுழற்சி அதிகரிக்கும், இதன்மூலம் நாளடைவில் அதன் திறன் குறைய ஆரம்பிக்கும்.

எனவே இனி ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும்போது உங்கள் பேட்டரி இந்த ஆயுட்க்காலத்தை கத்துத்தில் கொள்ளவும். 

Post a Comment

Previous Post Next Post